கடைக்கு சென்ற தாய்!வீட்டில் தனியாக சிறுமி!பின்னர் நடந்த விபரீதம்!

  • தனது பேத்தியான 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 53 வயது முதியவர்.

By Fahad | Published: Apr 04 2020 11:16 PM

  • தனது பேத்தியான 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 53 வயது முதியவர்.
  • வளைத்து பிடித்து போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.
கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி ஆவார்.இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அதே பகுதியில் பொன்னுசாமி என்பவரும் வசித்து வந்துள்ளார். சுமார் 53 வயதான இவர் சிறுமிக்கு தாத்தா முறையில் தூரத்து உறவினர் ஆவார்.இதனால் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரின் தாயார் வெளியில் கடைக்கு சென்றுள்ளார்.அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த பொன்னுசாமி சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து பேசிக்கொண்டே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதை சிறிதும் எதிர்பாராத சிறுமி அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.அதற்குள் பொன்னுசாமி அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்ததும் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். அப்போது சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய பொன்னுசாமியை தேடிவந்துள்ளனர். இந்நிலையில் பொன்னுசாமியை பிடித்த காவல்துறையினர் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.