அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க படுவதுப்பற்றி அமைச்சர் முக்கிய தகவல்

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க படுவதுப்பற்றி அமைச்சர் முக்கிய தகவல்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் சிலை கடந்த மாதம் ஜூலை 1 ஆம் வெளியே எடுக்கப்பட்டது இன்றுடன் 44 நாட்கள் ஆனநிலையில் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுகிறது .

இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கர்நாடகா ,ஆந்திரா என பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்கதர்கள் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கிறார்கள் . லட்சக்கணக்கான பக்கதர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருவதால் அங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் வயதானவர்கள் ,உப்பி=உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கவில்லை என்றும் வாதிட்டார் .இதனை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வழக்கறிஞர் பிரபாகரனுக்கு நீதிபதிகள் அறிவுரை செய்தனர்.

இந்நிலையில் இத்தகவல் அறிந்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ஆகம விதிப்படி முன்பு என்ன நடந்ததோ அதுவே இப்போதும் தொடரும். எனவே அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் .

 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube