மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ காலில் பேசியதை குறித்து மனம் திறக்கும் மாஸ்டர் பட நடிகை.!

அந்த வீடியோ காலில் இவர்கள் என்ன பேசுனார்கள் என்று மனம் திறந்துள்ளார் மாளவிகா.

By ragi | Published: May 27, 2020 11:38 AM

அந்த வீடியோ காலில் இவர்கள் என்ன பேசுனார்கள் என்று மனம் திறந்துள்ளார் மாளவிகா. அதில், அந்த சாட் செம்ம ஜாலியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நடித்த இரண்டு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் இவர் மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ காலில் பேசிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செம்ம வைரலானது. தற்போது அந்த வீடியோ காலில் இவர்கள் என்ன பேசுனார்கள் என்று மனம் திறந்துள்ளார் மாளவிகா. அதில், அந்த சாட் செம்ம ஜாலியாக இருந்தது என்றும், இந்த படம் இந்த நேரத்தில் வெளியாக வேண்டியிருந்தது. அவ்வாறு வெளியாகியிருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று தான் பேசுனோம் என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc