வீட்டு வாசலில் நின்று சத்தமாக பேசியதால், ஆத்திரத்தில் கைத்துப்பாக்கியால் சுட்ட நபர்!

உலக நாடுகள் எங்கிலும் கொரோனா அச்சத்தால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அணைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிசோடி காணப்படுகிறது. 

இந்நிலையில், ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் அடைந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் ஜன்னலுக்கு வெளியே ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

இதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்கள் போகால், அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.