காதலனின் வெறிச்செயல் :காதலியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன்!

ரஷ்யாவை சார்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்

By murugan | Published: Jul 31, 2019 12:13 PM

ரஷ்யாவை சார்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர்.இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்து உள்ளார்.Image result for Ekaterina Karaglanova எகெடெரினா இன்ஸ்டாகிராமில்  தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். இவர் மாஸ்கோவில் உள்ள வாடகை வீட்டில் எகெடெரினா தங்கி உள்ளார். கடந்த சில நாள்களாக எகெடெரினா காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால் இது குறித்து காவல்நிலையத்தில் எகெடெரினா பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். Image result for Ekaterina Karaglanova இந்நிலையில் எகெடெரினா தங்கி வீட்டில் இருந்த சூட்கேசில் இருந்து சடலமாக எகெடெரினா மீட்கப்பட்டார்.இந்த கொலை வழக்கில் எகெடெரினா முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் ,  சிசிடிவி கேமரா பதிவை வைத்து எகெடெரினா முன்னாள் காதலன் சூட்கேஸ் உடன் சென்றது தெரியவந்தது. அதை வைத்து அவரை விசாரணை செய்தோம். அதில் எகெடெரினா முன்னாள் பிரிந்த நிலையில் புதிய ஒரு காதலனுடன் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு இருந்தார்.அதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் காதலன் எகெடெரினாவை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார் என போலீசார் கூறினர்.
Step2: Place in ads Display sections

unicc