சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் ! கைதுசெய்யப்பட்ட இருவர் சிறையில் அடைப்பு

சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில்  கைதுசெய்யப்பட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊர் உள்ளது.அங்கு ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயது நிரம்பிய ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.இதனிடையே இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியூருக்கு சென்றனர்.அந்த சமயத்தில் ஜெயஸ்ரீ தனியாக இருந்துள்ளார்.அப்பொழுது திடீரென்று ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது.இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.அங்கு ஜெயஸ்ரீ உடல் முழுவதும் தீ பிடித்து எறிந்த நிலையில் வலியால் துடித்தார். 

இதன் பின் கிச்சைக்காக ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன்  முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சமயத்தில் மருத்துவமனைக்கு விழுப்புரம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.அவரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார்.அவரது வாக்குமூலத்தில்,எனது வீட்டுக்குள்   கலியபெருமாள் மற்றும்  முருகன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.ஆனால் நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஜெயஸ்ரீ. இந்த சம்பவம் குறித்து அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள் மற்றும்  முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் தந்தை மற்றும் முருகனுக்கு முன்பகை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கைதான முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் இருவரும் விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.