காஷ்மீர் விவகாரம் : விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்

By venu | Published: Aug 13, 2019 07:30 AM

காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது .மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தது. இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது இந்த நிலையில் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  எம்.பி.யுமான  திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் தேதி அறிவிக்கப்படும். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc