மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்!நிதி ஒதுக்கீட்டில் எந்தஒரு மாற்றமும் இருக்காது -நிதி அமைச்சகம்

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.ஜூலை 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசின் பட்ஜெட்டை  தாக்கல் செய்யும் நிலையில்,மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அதில், இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது என்றும்
தவிர்க்க முடியாத திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் நிதி மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற பரிசீலிக்கப்படும் என்றும்  அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.