கொரோனாவுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

உலக வல்லரசு நாடாக அறியப்பட்ட அமெரிக்காதான் தற்போது கொரோனாவிலும் முன்னணியில் இருக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இது குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரேஷ் ரெட்டி பேட்டியளித்தார். அதில் இந்திய மருத்துவர்களின் கொரோனா தடுப்பு பங்களிப்பு, அமெரிக்காவின் மருத்துவ நிலை என பலவற்றை பற்றி கூறியுள்ளார்.

அந்த பெட்டியிலிருந்து டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறிய சில கருத்துக்கள் இதோ, ‘ இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடம் என கூறிவந்த அமெரிக்கா, தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பலி எண்ணிக்கையில்,  கொரோனா பரிசோதனை செய்த எண்ணிக்க்கையில் உலக அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதுதான் தற்போதைய அமெரிக்க நிலை.

அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்களில் ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியர்தான். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னடியில் துணிச்சலுடன் செயல்பட்டு வருவது இந்திய வம்சாவளி மருத்துவர்கள்தான். இந்திய மருத்துவ சமூகத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது ஓரிரு மாதங்களில் முடிந்து விடுகிற போர் கிடையாது. 1 முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்கள் கவலைப்படுகிறார்கள், மக்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. ஊரடங்கினை சரியான திட்டமிடல் இல்லாமல் தளர்த்தினால் கொரோனா வைரஸ் மீண்டும் வந்துவிடும்.  அப்போது பாதிப்புகள் இன்னும் அதிகமாகியிருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மக்களின் கைகளில்தான் உள்ளது.
மருத்துவ சாதனங்கள், மருந்துப்பொருட்களை வாங்குவதற்கு சீனாவை சார்ந்திருக்காமல் தானே உற்பத்தி செய்ய தொடங்க வேண்டும் என அமெரிக்கா தற்போது பாடத்தை கற்றுள்ளது என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.