கார்கில் போரின் போது எளிதாக பாகிஸ்தானை வெற்றி பெற்ற இந்திய அணி !

கார்கில் போரின் போது எளிதாக பாகிஸ்தானை வெற்றி பெற்ற இந்திய அணி !

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியும் , பாகிஸ்தான் அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இப்போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தான் கார்கில் போர் ஜம்மு காஷ்மீரில் நடந்தது.
கார்கில் போர் அல்லது கார்கில் பிரச்சனை 1999-ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube