நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.

ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது.

Image result for பிசிசிஐ

ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை பயன்படுத்தினால் மீண்டும் டிஆர்எஸ் வாய்ப்பு கிடையாது என்பதால் பல வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் விக்கெட் இழந்து உள்ளனர்.

பந்துவீசும் போது நோ-பால்களை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பதால் பின்னர் டிவி ரிப்ளேவில் நோ-பால்  என்பது தெரிய வரும். சில நேரங்களில் பேட்ஸ்மேன் அவுட்டாகும் போது நோ-பால் என்ற சந்தேகம் வரும் போது மூன்றாவது நடுவரிடம் ஆலோசனைகள் செய்வார்கள் அதையும் மீறி சில சமயங்களில் அது நோ-பால் என்பது தெரியவரும் இது வழக்கமாக நடந்து வருகிறது.

Image result for ஐசிசி

இந்நிலையில் பிசிசிஐ விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என நடுவர்கள் ஆராய வேண்டு என்று  ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்தது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட ஐசிசி முதலில்  இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் இந்த விதியை பயன்படுத்த அனுமதி  கொடுத்து உள்ளது.

அதன் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பின்னர் சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்தி கொள்ளாமல் என ஐசிசி கூறியுள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube