மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்..!!

நாமக்கல் சேர்ந்த ராஜவேல் மற்றும் சுஜிதா இரு தம்பதிகள் இடையே சண்டைகள்

By gowtham | Published: Dec 22, 2019 05:43 PM

  • நாமக்கல் சேர்ந்த ராஜவேல் மற்றும் சுஜிதா இரு தம்பதிகள் இடையே சண்டைகள் ஏற்பட்டுள்ளது.
  • ஆத்திரமடைந்த ராஜவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்றுள்ளார்.
நாமக்கல் அடுத்து குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜவேல் மற்றும் சுஜிதா இரு தம்பதிகள் ராஜவேல் ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது தற்போது ராஜவேல்க்கும் சுஜிதாவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சண்டை பெரிதாகியது இதை அடுத்து அப்போது ராஜவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராஜவேல் பிரித்து சுஜிதாவை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரொம்ப படுகாயமடைந்த சுஜிதா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறாள். இதையடுத்து மனைவியை கொலை செய்ய முயற்சித்த ராஜவேலை நாமக்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Step2: Place in ads Display sections

unicc