திகில் சம்பவம்..! மரக்கட்டையை பிடித்து நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கிய நபர் ..!

நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பின் சற்று தொலைவில் மரகட்டையை பிடித்து 59 வயது

By murugan | Published: Nov 12, 2019 07:20 AM

நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பின் சற்று தொலைவில் மரகட்டையை பிடித்து 59 வயது மதிப்புதக்க ஒருவரரை போலீசார் மீட்டு உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் நயாகரா நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தால் ஒரு எலும்பு கூட கிடைக்காது அந்த அளவிற்கு தண்ணீர் சீறிப்பாயும்.அப்படிப்பட்ட ஆபத்தான நீர் வீழ்ச்சியின் விளிம்பில் 59 வயது மதிப்புதக்க ஒருவர் மரக்கட்டையை பிடித்து கொண்டு இருக்கிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்க ஒரு பொலிஸாரின் இடுப்பில் கயிறை கட்டிவிட்டு அனுப்பினார். அந்த போலீசார்  அவரை தண்ணீரில் மூழ்கி விடாமல் பிடித்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஒரு போலீசாரால் அவரை மீட்கமுடியாது என எண்ணி மற்றோரு போலீசாரை அனுப்பி வைத்து அந்த நபரை கைப்பற்றினர்.மீட்கப்பட்டவர் நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவரால் கை ,கால்களை அசைக்கமுடியவில்லை இதனால் அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிக்சை கொடுத்து உள்ளனர். இவ்வளவு ஆபத்தான பகுதியில் எப்படி சென்று இருப்பார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc