ஆடுகள் தொடாத ஆடாதோடா மூலிகையின் மகத்துவமான மருத்துவ குணங்கள்….!!!

ஆடாதோடா மூலிகையானது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இல்லை மாமர இல்லை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இல்லை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. இதனுடைய இல்லை, தண்டு, வேர் முதலியன மருத்துவ குணம் கொண்டது. கால்நடைகள் இதனை உண்ணாது.

ஆடாதோடா :

Image result for ஆடாதோடா :

 

ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாசநோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஆக்சிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைப்பார்கள்.

ஆஸ்துமா :

Image result for ஆஸ்துமா :

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால், ஆஸ்துமா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

இருமல் :

Image result for இருமல் :

நீண்ட நாள் தொடர்ந்த சளி, இருமல், தொண்டைக்கட்டு, போன்ற நோய்களுக்கு இது இது ஒரு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்துமா, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.

குழந்தைகளுக்கான பிரச்சனை :

Image result for குழந்தைகளுக்கான பிரச்சனை :

ஆடாதோடா இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியை போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும்.

இதில் பச்சையம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment