குறைந்த செலவில் சினிமா எடுத்தால் அரசு ரூ.7,00,000 வழங்கும்

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கம் நிலவி வருகிறது.இந்த நிலையில் சிறிய பட்ஜெட் படங்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது இது தொடர்பாக மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2015,2016,2017ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை மாநில செய்தி நிலையத்தில் பெற்று, வருகின்ற 29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும்  இதில் தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.