மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்திய தமிழக அரசு .!

மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்திய தமிழக அரசு .!

நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்கயுள்ள நிலையில், தமிழக அரசு மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறையாததால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு  நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதில், பல கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு  ஊரடங்கில் சில தளர்வு கொடுத்தது.

அதன்படி மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், பல மாநிலங்களில் நேற்று முன்தினம் மது கடைகளும் திறக்கப்பட்டது.  டெல்லி, ஆந்திரா அரசுகள் மதுபானங்களின் விலையை 70% அளவுக்கு உயர்த்தின. இதைத்தொடர்ந்து நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்கவுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி உள்ளது. 40  நாள்கள் ஊரடங்கு காலத்தில் மது கடைகளும் மூடப்பட்டது. நீண்ட நாட்கள் மது கடைகள் மூடப்பட்டதால் அதை நிரந்தரமாக  மூட சில தரப்பினர் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube