கள்ளச்சாராயம் விற்ற கும்பல்! தட்டிக்கேட்டவர்களை நாட்டு துப்பாக்கியால் சுட்ட கும்பல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் இதனால், எங்கு மது கிடைக்கும் என அலைமோதி திரிகின்றனர். இதனையடுத்து, புலிமேடு கிராமத்தில் அல்லேரி மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று இரவு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க நினைத்த கிராம மக்கள் கள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவற்றை வாங்க வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளனர். 

இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த சாராய விற்பனை கும்பல் நாட்டு துப்பாக்கிகளால் சுட்டதில், புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.