முதன் முறையாக ரஷிய அதிபரை சந்தித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் தலைநகரான ஹனோய் நகரில் நடைபெற்றது.இந்த இரண்டு சந்திப்பும்  தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பக்கூடும் என வடகொரியா எச்சரித்தது.
சமீபத்தில் அணுகுண்டு ஆயுதம் ஒன்றை சோதித்தது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக ரஷிய அதிபரை வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச உள்ளார்.என பேசப்பட்ட நிலையில் கிம் ஜாங் அன் கடந்த 23-ம் தனது பயணத்தை ரெயிலில் புறப்பட்டு ரஷியாவுக்கு சென்றார்.
 நேற்று முன் தினம் காலை  ரஷியாவின் பசிபிக் துறைமுக நகரான விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஹசன் ரெயில் நிலையத்திற்கு  வந்தடைந்தார். அங்கு கிம் ஜாங் அன்-க்கு  ரஷிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கிம் ஜாங் அன்னை சந்திப்பதற்காக விளாடிவோஸ்டோக் நகருக்கு  நேற்று  புதினும் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
8 வருடங்களுக்கு  பிறகு ரஷியா மற்றும் வடகொரியா தலைவர்கள்  சந்தித்துபேசி உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவர்  கிம் ஜாங் அன் தந்தை கிம் ஜோங் இல் மற்றும் அப்போது  ரஷிய அதிபர் இருந்த  டிமிட்ரி மெட்வடேவ் ஆகிய இருவரும் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
murugan

Leave a Comment