சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன்

By Fahad | Published: Apr 05 2020 08:55 AM

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.