அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை இம்மாதம்

By Fahad | Published: Apr 08 2020 08:53 AM

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த மாதம் முதல், ஏழாயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் இந்தமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், 15 ஆயிரத்து 452 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர்கள் பள்ளிக்கு கால தாமதமாக வருவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.