ரோபோ வரைந்த ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது! காரணம் என்ன தெரியுமா?

சின்ன வயதில் நாம் வரைந்த அல்லது கிறுக்கிய பல ஓவியங்கள் இன்றளவிலும் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். நம் கிறுக்கல்கள் கூட ரவி வர்மா அளவிற்கு மிக பிரம்மாண்ட ஓவியமாக நமக்கு தெரியும். மனிதன் ஒரு ஓவியத்தை தத்துரூபமாக வரைவது எளிது தான்.

ஆனால் இதை ஒரு ரோபோ செய்வது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என நீங்களே யோசித்து பாருங்கள். இங்கே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பை கண்டு ஒரு நிறுவனம் கோடிக்கணக்கில் ஏலம் எடுத்துள்ளனர். இதன் முழு விவரத்தையும் இனி தெரிந்து கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு
மனித மூளையை போன்றே செயற்கையான முறையில் உருவாக்கியதே இந்த செயற்கை நுண்ணறிவு. ரோபோக்கள் இயங்குவதற்கு மூல காரணமாக இருப்பது இவை தான். இவற்றை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை “எந்திரன்” படத்திலே நாம் பார்த்திருப்போம்.

PC


வரலாற்று ஆய்வு
14-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் ஆண்டு வரை தீட்டப்பட்ட ஓவியத்தின் முழு விவரங்களையும் ஆராய்ந்து அதிலிருந்து இதன் செயற்கை நுண்ணறிவிற்கு ப்ரோகோரமிங் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் இந்த ஓவியமானது, அவற்றை காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட முறையில் வரையப்பட்டுள்ளது.

முதல் ஏலம்
இதுவரை இது போன்ற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் ஏலத்திற்கு வந்ததில்லை. இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தின் பெயர் “போர்ட்ரெய்ட் ஆப் எட்மண்ட் பெலாமி” என்பதாம். மேலும், இது 4,32,000 லட்சம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை இதனை உருவாக்கிய நிறுவனமே எதிர்பார்க்கவில்லையாம். இனி இது போன்ற பல வியக்கத்தக்க ஆச்சரியங்களை எ.ஐ உலகில் காணலாம் மக்களே!

 

Leave a Comment