வெங்காய வியாபாரிகளுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்த மத்திய அரசு ..!

வெங்காய வியாபாரிகளுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்த மத்திய அரசு ..!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.   மகாராஷ்டிரா ,கர்நாடகா ஆகிய  மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் வரும் வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்து உள்ளது.

வெங்காயத்தின் விலை தங்கத்தை போல உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.மேலும் ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு பாதியாக குறைந்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் பிரியாணியின் விலை அதிகரித்து உள்ளது.பிரியாணி சமைக்க அதிக வெங்காயம் தேவைப்படுவதால் இதனால் விலையை உயர்த்தியதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.

இந்நிலையில் மத்திய அரசு வெங்காயத்தை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரு கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அதில் மொத்த வியாபாரிகள் 25 டன்னும் , சில்லரை வியாபாரிகள் 05 டன் வரை மட்டுமே வெங்காயத்தை விற்பனை செய்யவேண்டும் என கூறியுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube