தனது படம் வெளியான அன்றே இறந்த பிரபல ஹாலிவுட் நடிகர்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர் ரெஃப்ளக்ஷன்ஸ் இன் எ கோல்டன் ஐ

By Fahad | Published: Mar 28 2020 12:15 PM

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர் ரெஃப்ளக்ஷன்ஸ் இன் எ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் தி பிளாக் ஹோல் , அலிகேட்டர் , லண்டன் ஹேஸ்  உட்பட  100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இவருக்கு கடந்த சில மாதங்களாக முளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் நேற்று இறந்தார். இவர் நடித்து இருந்த எல் கேமினோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேற்று வெளியானது. படம் வெளியான அன்று ராபர்ட் பார்ஸ்டர் இறந்தததால் படக்குழுவிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News From el camino