அரேபிய கடலில் கேரள மீனவர்களின் வலையில் விமானத்தின் என்ஜின்..!

கேரளாவைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் சிக்கி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் முனாம்பம் கடற்கரையில் அரேபிய கடலில் இருந்து மீனவர்கள் மீன் பிடித்து விட்டு வரும்போது வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் இழுக்கப்பட்டு வந்தது.
மீட்கப்பட்ட விமானத்தின் என்ஜினை கரைக்கு கொண்டு வந்தும் மீனவர்கள் முனம்பம் காவல் நிலையத்த்திற்கும் ,பின்னர் கடலோர காவல் நிலையத்தை தகவல் கொடுத்தனர்.
மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கிய இயந்திரம் குறித்து மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் நிலைய ஆய்வாளர் எம்.அஷ்ரப்விடம் விமானத்தின் என்ஜின் மூலம்  படகுகளுக்கும் சிறிது சேதத்தை ஏற்படுத்தியது என கூறினர்.
இதனையடுத்து  கடலோர காவல்படை , இந்திய கடற்படை மற்றும் கடற்படை விமான கட்டளைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. விமானத்தின் என்ஜினை துறைமுகத்திற்கு அருகில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அஷ்ரப் கூறினார்.
அங்கு விரிவான ஆய்வு நடத்தப்படும். விமானத்தின் என்ஜின் சமீபத்திய விமான விபத்தில் ஏற்பட்டது அல்ல இது பழைய விமானத்தின் என்ஜின் என அதிகாரிகள் கூறினர்.

author avatar
murugan