முடிவுக்கு வந்தது ஆசிரியர்கள் போராட்டம்....6 நாட்களுக்கு பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு...!!

சென்னை DPI அலுவலகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள்

By Dinasuvadu desk | Published: Dec 29, 2018 09:12 PM

சென்னை DPI அலுவலகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சம வேலைக்கு சமஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சென்னை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சுமார் 6 நாட்களாக இரவு பகலாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரதீப் யாதவ் நடத்திட பேச்சுவார்த்தையில் தற்போது 6 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் , அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc