முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் கமிஷன் !!!

  • தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி மே 26-ஆம் தேதி முடிகிறது.
  •  இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து உள்ளது .
  • இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19  வயது  உடையவர்கள் என குறிப்பிட்டு உள்ளது . 
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி  மே 26-ஆம் தேதி முடிகிறது.
இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர்களின் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் (20.10 லட்சம்) ,உத்தரபிரதேசம் மாநிலத்தில் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் மாநிலத்தில் (13.60 லட்சம்) , ராஜஸ்தான் மாநிலத்தில் (12.80 லட்சம்), மராட்டியம் மாநிலத்தில் (11.90 லட்சம்), தமிழ்நாடு மாநிலத்தில் (8.90 லட்சம்), ஆந்திரா மாநிலத்தில் (5.30 லட்சம்) , டெல்லியில் ( 97,684) வாக்காளர்கள் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து உள்ளது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
மேலும் இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19  வயது  உடையவர்கள் என குறிப்பிட்டு உள்ளது .