பொதுபோக்குவரத்து தொடங்குவது எப்போது.? முதல்வர் விளக்கம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு வந்த உடன் பொதுபோக்குவரத்து திறந்து விடப்படும்.

இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்த பின் நெல்லை செய்தியர்களிடம் பேசிய முதல்வர் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் முறையாக இ – பாஸ் கேட்போருக்கு விரைவாக இ- பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தொழிற்சாலைகளில் பணி புரிய வருகைத்தரும் வெளி மாநிலத்தவர்களுக்கு விரைவாக இ- பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு வந்த உடன் பொதுபோக்குவரத்து திறந்து விடப்படும் என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.