சீன அதிபர் ஜின்பிங்- மோடி சந்திப்பு..! பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த நாய்...!

சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீன அதிபர் ஜின்பிங்

By murugan | Published: Oct 12, 2019 02:03 PM

சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தமிழகம் சார்பில் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தி ஓய்வெடுத்தார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு  சாலை மார்க்கமாக மோடியை சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் சென்றார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி , சட்டை மற்றும்  துண்டு அணிந்து சீன அதிபரை வரவேற்றார். இதைத்தொடர்ந்து இருவரும் நடந்து கொண்டே மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்புகளை பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கம் கொடுத்து வந்தார். இதனால் மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது  திடீரென ஒரு நாய் புகுந்தது. இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பையும் மீறி  எப்படி நாய் அங்கு வந்தது என அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் நாய் விரட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc