உள்ளாட்சி தேர்தல்..! திமுக விருப்ப மனு பெறலாம் -மு.க ஸ்டாலின்..!

சென்னையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.அப்போது “வருகின்ற 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக சார்பில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என கூறினார்.இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணி அமைத்தே எதிர்கொள்ளும் என கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 14-ம் தேதி  முதல் 20-ம் தேதி வரை திமுக விருப்ப மனு பெறலாம் என கூறினார்.அதிமுக வருகின்ற 15, 16 -ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெற உள்ள நிலையில் திமுக 14-ம் தேதி முதல் 20-ம் விருப்ப மனு பெறுகிறது.

author avatar
murugan