விவசாயிகள் வழி விடாததால் சடலத்தை பாலத்தின் மேலே இருந்து இறக்கிய அவலம் !

விவசாயிகள் வழி விடாததால் சடலத்தை பாலத்தின் மேலே இருந்து இறக்கிய அவலம் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு  தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால்  சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால்  சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது.

இதனால் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து  நாராயணபுரம் காலனி சார்ந்தவர்கள் இறந்தால் அவ்வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சில நாள்களுக்கு முன் நாராயணபுரம் காலனி சார்ந்த குப்பன் என்பவர் இறந்து உள்ளார். குப்பன் உடலை விவசாயம் நிலம் வழியாக எடுத்து செல்ல விவசாயிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் வேறுவழியில்லாமல் பாலத்தில் மேலே கயிற்றின் மூலமாக கீழே இறக்கி சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இதனால்  நாராயணபுரம் காலனி மக்கள்  பாலாற்றின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது நிலங்களை அரசு கையகப்படுத்தி சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube