டிக் டாக்கில் பாட்டு பாடி அசத்திய பெண் துணை முதலமைச்சர்.!

டிக் டாக்கில் பாட்டு பாடி அசத்திய பெண் துணை முதலமைச்சர்.!

  • ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, ஜெகன் மோகன் ரெட்டியை புகழும் படியாக டிக் டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • “ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் முன்பு வெளியாகி கவனம் பெற்றது.

டிக் டாக்கில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாவது சாதாரணமாக நடக்கும். அதில் பிரபலங்களும், டிக் டாக்கில் கவனம் செலுத்தி வருவது உண்டு. அதை போன்று ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழும் படியாக வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரை புகழும்படியாக “ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் முன்பு வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பெண் துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி, அந்த பாடலுக்கு நடித்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube