யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது-பியூஸ் கோயல்

யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடைபெற்றது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் திட்டம் என ராகுல் அறிவித்துள்ளது .மக்களை ஏமாற்றும் முயற்சி ராகுல் காந்தியின் அறிவிப்பு இந்திய மக்களிடம் எடுபடாது. இதை மக்கள் அறிவர்.மாநில வளர்ச்சிக்காக புதுச்சேரி அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது.கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment