டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற நாள்!

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இந்தியாவின் ஒரு சிறந்த தலைவர் ஆவார். இவர் ஜூலை 25-ம் நாள் 2002-ல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்.

இவர் ஏவுகணை வாகன தொழிநுட்ப வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருந்ததால், இந்திய ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவை ஒரு வளரும் நாடாகாவே பார்த்தவர். இவர் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், லெட்சுமி சாகலை தோற்கடித்து, குடியரசு தலைவராக பதவியேற்றார். இவர், ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25 2007 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.