தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்!!!

  • இன்று புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் பிப்ரவரி 26 -ஆம் தேதி அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் இடத்திற்கு சென்று.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.

இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.

மீண்டும் பாகிஸ்தான் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடந்த வந்தது அப்போது இந்திய ராணுவம்அவர்களை விரட்டி அடித்தது.

இந்நிலையில் இன்று புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை ட்ரால் அருகே பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

இதனால்  ஜம்மு-காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி முத்சார் அகமது கான் கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment