பாஜக குறித்து விமர்சனம்:தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும், தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, பாஜக கருத்து அல்ல.

எதிர்க்க வேண்டியதை அதிமுக எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம்.அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது; அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும்.பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment