நகையை விழுங்கிய மாடு! பழம் கொடுத்து 10 நாட்களாக சாணத்தை கிளறும் குடும்பம்!

ஹரியானா மாநிலம், சீர்ஸாவில் கலனவல்லி எனும் பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ்.

By manikandan | Published: Oct 31, 2019 12:35 PM

ஹரியானா மாநிலம், சீர்ஸாவில் கலனவல்லி எனும் பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ். இவரது மனைவியும் மருமகளும் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார்.  அப்போது தங்கள் நகைகளை கழட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துள்ளனர். பிறகு கவனிக்காமல், அந்த நகைகள் இருந்த பாத்திரத்தில் காய்கறி கழிவுகளை போட்டுவிட்டனர். அதனை அருகில் இருந்த மாடு நின்றுவிட்டது. காய்கறிகளோடு சேர்த்து, நகைகளையும் நின்றுவிட்டது. இதனை பின்பு அறிந்த மாமியார் மருமகள்கள், விஷயத்தை ஜனகராஜிடம் கூற, அவர், அந்த காளையை தேடி பிடித்து கால்நடை மருத்துவரிடம் கூட்டி சென்றார். அவர் கூறிய அறிவுரைக்கு இணங்க, மாட்டிற்கு தினமும் பழங்கள் போல சாப்பாடு கொடுத்து வருகின்றனர். மேலும் மாடு போடும் சாணத்தையும் ஆராய்ந்து வருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் நகை கிடைக்காததால் இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு அந்த மாடை கோசாலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார் ஜனகராஜ்.
Step2: Place in ads Display sections

unicc