தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி -போஸ்டரால் பதவியேற்க தடை விதித்த நீதிமன்றம்!

  • சிவகங்கையில் தேவி மாங்குடி  என்பவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர்  பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • இருவரும் வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியான சங்கராபுரத்தில் பெண்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி என்பவர் அவரது மனைவியான தேவி மாங்குடியை வேட்பாளராக களமிறக்கினார் .இவருக்கு எதிராக அங்குள்ள தொழில் அதிபர் ஐயப்பன்  என்பவர் அவரது மனைவி பிரியதர்ஷினியை களமிறக்கினார்.

ஆனால் தேவி மாங்குடி வாக்கு எண்ணிக்கையில் 318 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி பெற்ற சான்றிதலை வழங்கினார்.ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி ஒரு பெட்டி வாக்கு எண்ணப்படவில்லை என்ற புகாரை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷயத்தை அறிந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்தியதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

இதனை அடுத்து பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் அறிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினரும் வெற்றி பட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று ஊர் மக்கள் குழப்பமடைந்தனர் .தற்போது இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.