சியோமி நிறுவனம் தற்போது எம்ஐ டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது..!

சியோமி நிறுவனம் தற்போது எம்ஐ டிவி என்ற புதிய வசதியையும் கொண்டு வந்துவிட்டது இந்தியாவில். குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வழங்கி வரும் சியோமி நிறுவனம் தற்போது பார்ட்னர்ஷிப் உதவியுடன் டிவியையும் கொண்டு வந்துள்ளது.

சியோமி நிறுவனமும், வெப்சீரியல் நிறுவனமான தி வைரல் ஃபீவர் என்ற நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அறிவித்த அறிவிப்பின்படி மிடிவி 4 மற்றும் மிடிவி 4ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுளன.

சமீபத்தில் தனது புதிய வெப் சீரியலான ‘டெக் கான்வர்செஷன் வித் டாட்’ என்ற சீர்யலை இளைதலைமுறையினர்களுக்காக வெளியிட்டது தி வைரல் ஃபீவர் நிறுவனம்.  இந்த பார்ட்னர்ஷிப் குறித்து தி வைரல் ஃபிவர் நிறுவனத்தின் சிஓஓ கூறியதாவது “டிஜிட்டல் உள்ளடக்கம் பார்வையாளர்களின் வாழ்க்கையில் புதிய நுண்ணறிவுகளை உருவாக்குகிறது, மேலும் சியோமி-ன் புதிய வரப்பிரசாதம் இந்திய சந்தையில் உண்மையிலேயே ஒரு போட்டியை உருவாக்கியுள்ளது.

” சியோமி இந்தியாவின் மி டிவி மேனேஜர் சுதீப் சாஹு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘இந்த டிவிஎஃப் டிவி டிஜிட்டல் உலகில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்துவதோடு, உயர்தர அதிவேக வீடியோக்களை அனைத்து ரசிகர்களுக்கும் வழங்குவதில் மிகவும் பெருமிதம் கொண்டுள்ளன.

சியோமி நிறுவனம் தனது மிடிவி4 டிவியை ரூ.39,999 என்ற விலையில் அறிமுகம் செய்கிறது. 55 இன்ச் 4K HDR டிஸ்ப்ளே கொண்டது இந்த டிவி. பெரிய ஸ்க்ரீன் தேவைப்படாதவர்களுக்கும் குறைந்த விலையில் இந்த டிவி கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் புதிய மாடலாக இந்த மிடிவி 4ஏ என்ற மாடலில் 32 இன்ச் வடிவில் HD டிஸ்ப்ளேவுடன் ரூ.13,999 என்ற விலையில் கிடைக்கும்.

அதேபோல் 43 இன்ச் திரையுடன் கூடிய டிவி ரூ.22,999 என்ற விலையில் கிடைக்கும், இதுவும் முழு HD வடிவ பேனல் கொண்டது ஆகும். மேலும் இந்த மாடல் டிவிக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சியோமி இலவசமாக இன்ஸ்டால் செய்தும் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment