முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் – மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!

மகாராஷ்டிராவில் முட்டைகள் புரதச் சத்தை அதிகரிக்கும் என்பதால், முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசை எதிர்ப்பதற்கு நோய் எதிர்ப்பாற்றல் உடலில் அதிகம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய புரதச்சத்து முட்டையில் அதிகம் உள்ளதாகவும் இதனால் கொரோனாவை வெல்லக்கூடிய நோய் எதிர்ப்பாற்றல் உடலில் அதிகரிக்கும் எனவும் மகராஷ்டிராவில் விளம்பரப்படுத்த பட்டுள்ளது.

எனவே, அங்கு முட்டையின் விற்பனை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில்  கொரோனா அதிகமுள்ள புனேயில் ஒரு நாளுக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை முட்டைகள் விற்பனைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 25 லட்சம் முட்டைகள் மட்டுமே பண்ணைகளால் வழங்க முடிகிறது. இதனால் ஒரு முட்டையின் விலை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட முட்டை 7 ரூபாய் 50 காசுகள் ஆக அதிகரித்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal