ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது-கார்த்தி சிதம்பரம்

9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல்

By Fahad | Published: Mar 28 2020 12:13 PM

9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,அவர் எத்தனை ஆண்டுகாலம்  மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.அவரால்  இந்த நாட்டுக்கு என்ன பயன்?பூமிக்குத்தான் பாரம்.அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினார்.மேலும் அவருக்கு சுயநலம் தான் முக்கியம் ,நாடு நலம் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார். ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் விமர்சனத்திற்கு கார்த்தி சிதம்பரம்  பதில் தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என பட்டம் பெற்ற ப.சிதம்பரத்தை பற்றி முதலமைச்சர் கூறியது, அவரது மனசாட்சியையே உறுத்தும். 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது .காஷ்மீர் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வருத்தம் அளிக்கிறது, அவர் ஜெர்மன் சரித்திரத்தை படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.