அரசியல் இலாபத்துக்காக C.B.I_யை பயன்படுத்தும் மத்திய அரசு....காஷ்மீரின் முன்னாள் முதல்வர்  கண்டனம்...!!

C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக

By Dinasuvadu desk | Published: Feb 04, 2019 01:55 PM

C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவிக்கையில் மத்திய அரசு தனது அரசியல் இலாபத்துக்காக C.B.I  உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகின்றது என்று  விமரசன்ம் செய்துள்ளார். https://twitter.com/OmarAbdullah/status/1092095518317125634
Step2: Place in ads Display sections

unicc