ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்துச்செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நெடுவாசல் , காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் தொடர்ந்த வழக்கில்ஜெம் லேப் , பாரத் பெட்ரோலியம் ரிசோர்ஸ் நிறுவனகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அனுமதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை ஏரிவாயு  சட்டத்திற்கு எதிரானது.மேலும் ஒற்றை உரிமம் மூலம்  ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்ததும் சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

இந்த வழக்கை நீதிபதிகள் 8 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.

 

author avatar
murugan