காவிரி போராட்டம் தொடர்பான வழக்கு : ஆஜராகாத ஸ்டாலின்

திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம்  நடத்தப்பட போராட்டம் தொடர்பாக

By venu | Published: Dec 26, 2019 03:27 PM

  • திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம்  நடத்தப்பட போராட்டம் தொடர்பாக     ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  
  • இந்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை. 
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்  காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சினர் பங்கேற்றனர்.ஆனால் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய  மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகிய 7 பேரும் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதனால் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆஜராகினர். இருவருக்கும்  குற்றப்பத்தரிக்கை நகல்களை நீதிமன்றம் வழங்கியது.பின்னர்  விசாரணை ஜனவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால்  சம்மன் கிடைக்காததால் ஆஜராகவில்லை என்று மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc