சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 அண்மையில்  உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், " குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் "ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

இதனையடுத்து  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மனுவை நாளை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

Latest Posts

மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!
சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!