உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை

 உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அண்மையில் உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், " குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் "ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.

இந்நிலையில்  நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மேலும் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

 

Latest Posts

சோபியன் என்கவுண்டர்... மீண்டும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!
Breaking: தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்!
தொடரும் ஆவணக் கொலை.. காதல் திருமணம் செய்த அக்காவை கொலை செய்த தம்பி!
சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள்! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வரிடம் மனு
#BREAKING: நாளை முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை..!
இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!
தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம்!
கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!
பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது! - உயர்நீதிமன்ற மதுரை கிளை