டிக் டாக்கால் நடந்த கொடூரம்!வாழ்க்கையை வெறுத்த மாணவி செய்த செயல்!

டிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய

By sulai | Published: Jan 14, 2020 09:24 PM

  • டிக் டாக்கால் நடந்த விபரீதம்.டிக் டாக்கில் பேசி பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர்.
  • வாழ்க்கையை வெறுத்த சிறுமி மன உளைச்சலில் செய்த செயல்.
திருப்பூர் மாவட்டத்த்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து நிறைய லைக்குகளையும் பெற்றுள்ளார். இதனால் மேலும் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு டிக் டாக் பிரபலமாக உருவாக்கியுள்ளார்.இவரது வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வந்தாலும் கோயம்புத்தூரில் உள்ள செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனிபட்ட முறையில் பேசியுள்ளார். பின்னர் தொலைபேசி நம்பரை வாங்கிய அவர் தொடர்ச்சியாக பேச தொடங்கியுள்ளார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இதை பயன்படுத்திய வேல்முருகன் சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்த அவர் சிறுமி கர்ப்பம் தரித்த பிறகு பேசுவதை படிப்படியாக குறைத்துள்ளார்.இதனால் என்னசெய்வது என அறியாமல் இருந்த மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் வீட்டிலும் யாரிடமும் பேசாமலே தனிமையில் இருந்துள்ளார்.பின்னர் வாழ்க்கையை வெறுத்த சிறுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது . பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் வாக்குமூலத்தை வாங்கி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்துள்ளனர்.மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc