கொலைக்கு கொலை பழிக்கு பழி வாங்கிய தம்பி!திடுக்கிடும் தகவல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கடந்த

By sulai | Published: Jul 21, 2019 06:45 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவியுடன் சேர்ந்து மதுரையில் உள்ள அறியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் எருமைகுளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன்,வழிவிட்டானை கீரத்துறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்ததால் தமது சொந்த ஊரான கமுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தனது அண்ணன் வழிவிட்டானை கொலை செய்த மணிகண்டனை கொன்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் தம்பி சுந்தர் தேடி வந்துள்ளார். நீண்ட தேடுதலுக்கு பின்னர் மணிகண்டன் கமுதியில் இருப்பதை அறிந்த சுந்தர் தனது நண்பர்களுடன் கமுதி சென்றுள்ளார்.வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த மணிகண்டனை அரிவாள் போன்ற பலமான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதன் காரணாமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் எருமைக்குளம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சுந்தரையும் அவரது நண்பரையும் வளைத்து பிடித்துள்ளனர்.பின்னர் கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Step2: Place in ads Display sections

unicc