அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. ! இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை!

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும்

By murugan | Published: Aug 13, 2019 02:10 PM

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைப்பெற்றது.இந்த சண்டையில் போலீசார்  வெட்டி ராமா ஈடுபட்டு இருந்தார். ஆனால் போலீசாருக்கு  எதிரில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளில் போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி இருந்தார். இந்த சண்டையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் உயிர் இழந்தனர்.போலீசார்  வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்து உள்ளார். சத்திஸ்கரில் வெட்டி ராமா , வெட்டி கன்னி இருவருமே மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வந்தனர்.மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து வெட்டி ராமா விலகி போலீசில் சேர்ந்தார். ஆனால் பலமுறை வெட்டி கன்னியை மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பிரிந்து வருமாறு வெட்டி ராமா கடிதம் எழுதி உள்ளார். அண்ணனின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து வெட்டி கன்னி மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வருகிறார்  .  
Step2: Place in ads Display sections

unicc