கோவையில் தான் சேர்த்து வைத்திருந்து உண்டியல் பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கிய சிறுவன்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது.  இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில், பள்ளி சிறுவன் தனது பள்ளி கட்டணத்திற்காக சேர்த்து வைத்திருந்த உண்டியலை கொரோனா தடுப்பு பணிக்காக, அந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்த உண்டியலில் ரூ.7,000 இருந்தது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.