மோடிக்கு கருப்பு கொடி...பதற்றத்தில் பிஜேபி ...அதிகரிக்கும் எதிர்ப்பு...!!

திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார். 

By Dinasuvadu desk | Published: Feb 10, 2019 12:55 PM

திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார்.  சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார். மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.கஜா புயல் பேரிடரின்போது தமிழகத்தின் விவசாயிகளை மோடி காண வரவில்லை என்று அரசியல் கட்சிகளும் போராட்டக்காரர்களும் பிரதானமாக  குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.மேலும் மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளித்துள்ளதால் தமிழ் அமைப்புகள் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Step2: Place in ads Display sections

unicc